தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் உதவி ஆய்வாளர் - விழிப்புணர்வு ஏற்படுத்திய உதவி ஆய்வாளர்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் தேசிய ஊரக வேலைவாய்ப்பில் ஈடுபட்டுள்ள பொதுமக்களிடம் கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

கரோனா விழிப்புணர்வு
கரோனா விழிப்புணர்வு

By

Published : Jul 29, 2021, 1:08 PM IST

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக ரமேஷ் ராஜா பணியாற்றி வருகிறார். இவர், தமக்கு நேரம் கிடைக்கும் போது கிராமபுறங்களில் வசிக்கும் பொதுமக்களிடம் கரோனா விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார்.

இன்று (ஜூலை 29) மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைப்பணியில் ஈடுபட்டு வந்த காமாட்சிபுரம் கிராம மக்களை நேரில் சந்தித்து, அவர்களுக்கு முகக்கவசம் வழங்கினார்.

பின்னர், அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும், சோப்பு போட்டு கைகளை கழுவவேண்டும், கரோனா தடுப்பூசி கட்டாயமாக போட்டுக்கொள்ள வேண்டும் என பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இதையும் படிங்க: கரோனா தடுப்பு பணியாளர் தாக்குதல் - 8 பேர் மீது வழக்கு

ABOUT THE AUTHOR

...view details