திண்டுக்கல்: 2021 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரையின்போது ஆத்தூர் தொகுதியின் பாமக வேட்பாளர் திலகபாமா வீரக்கல் ஊராட்சியில் திமுக வேட்பாளர் ஐ. பெரியசாமியை தரக்குறைவாகப் பேசியதாகக் கூறி திமுக தொண்டர்களுக்கும், பாமக நிர்வாகிகளுக்குமிடையே கைகலப்பு ஏற்பட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இருதரப்பினரும் செம்பட்டி காவல் நிலையம், தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தனர். இச்சூழலில் திலகபாமா ஆத்தூர் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதன்படி திலகபாமா ஆத்தூர் நீதிமன்றத்தில் முன்னிலையாக வந்திருந்தார்.
'12 ஆண்டுகளுக்குப் பிறகு பாய்ந்தது வைகை; இது திமுகவின் சாதனை!'
பின்னர் செய்தியாளரைச் சந்தித்த திலகபாமா, "ஆத்தூர் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி தேர்தலில் நின்றிருந்தபோது பரப்புரையை எதிர்த்து வன்முறையில் ஈடுபட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தினர் என் மீது பொய் வழக்குகள் தொடுத்திருக்கிறார்கள்.
அந்த வழக்குகளைச் சட்டப்படி எதிர்கொள்வதற்காக ஆத்தூர் தொகுதிக்கு இன்று வந்திருக்கிறேன். தேர்தல் முடிந்த பிறகும் நாங்கள் குடகனாறு பிரச்சினையை நாங்கள் கையில் எடுத்திருக்கிறோம், நதியை மீட்டெடுப்போம் என்று சொல்லி இருந்தோம், அதற்கு எங்களது சட்டப்பேரவை உறுப்பினரையும் அழைத்துவந்து அதற்கான முயற்சிகளைத் தொடங்கியிருக்கிறோம், முதலமைச்சரையும் பார்த்திருக்கிறோம்.