தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாதிய பாகுபாடு நிலவும் ஊராட்சி அலுவலகத்தை பூட்டு போடும் போராட்டம்!

சாதிய பாகுபாட்டை கடைபிடிக்கும் ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துணை தலைவர் தலைமையில் பூட்டு போட்டு போராட்டம் நடைபெற்றது.

caste CASTE, DISCRIMINATION, UNIONOFFICE, LOCALBODY, ADMINISTRATION panchayat office caste discrimination சாதிய பாகுபாடு ஊராட்சி அலுவலகத்தில் பூட்டு போடும் போராட்டம் ஊராட்சி மன்ற தலைவர்
caste CASTE, DISCRIMINATION, UNIONOFFICE, LOCALBODY, ADMINISTRATION panchayat office caste discrimination சாதிய பாகுபாடு ஊராட்சி அலுவலகத்தில் பூட்டு போடும் போராட்டம் ஊராட்சி மன்ற தலைவர்

By

Published : Dec 25, 2020, 10:04 PM IST

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வானிக்கரை பகுதி ஊராட்சித் தலைவர் பேபி பரமசிவம்.

துணை தலைவர் பெருமாயி மற்றும் சந்திரா வேல்முருகன் ஆகியோர் பட்டியலின சமுதாயத்தை சார்ந்தவர்கள் என்பதால் தரையில் அமர வைத்து ஆலோசனை கூட்டம் நடத்திப்பட்ட சம்பவம் சமூக வலைத்தளத்தில் பரவியது.
இதனால் பேபி பரமசிவம் இப்பகுதி மக்களுக்கு மூன்று நாள்களாக தண்ணீர் தராமல் அடைந்து வைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனிடையே பொதுமக்கள், குழந்தைகளுடன் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பெருமாயி மற்றும் உறுப்பினர் சந்திராகலா, வேல்முருகன் மூவரும் பொதுமக்களுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு பூட்டுப் போட்டு போராட்டம் நடத்தினர்.
தொடர்ந்து ஊராட்சி துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்களை நாற்காலியில் அமர வைக்காமல் தரையில் அமர வைத்து தீண்டாமையை கடைபிடிக்கும் ஊராட்சி மன்ற தலைவர் மீது பட்டியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 2015 கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கை இல்லை என்பதால் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பூட்டு போட்டு ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக போராட்டம் நடைபெற்றது.

இது குறித்து அரசு அலுவலர்கள் முறையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் மற்றும் துணைத் தலைவர் உறுப்பினர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இருப்பினும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர் தரையில் அமர வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : அதிகரிக்கும் சாதிய பாகுபாடு: ஊராட்சி மன்ற உப தலைவர் மீது ஊராட்சித் தலைவர் புகார்

ABOUT THE AUTHOR

...view details