தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காவிட்டால் போராட்டம் - விக்கிரமராஜா எச்சரிக்கை

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கவிட்டால் மத்திய அரசுக்கு எதிராக அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா எச்சரித்துள்ளார்.

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காவிட்டால் போராட்டம் - விக்கிரமராஜா எச்சரிக்கை
பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காவிட்டால் போராட்டம் - விக்கிரமராஜா எச்சரிக்கை

By

Published : Aug 19, 2021, 7:20 PM IST

Updated : Aug 19, 2021, 8:08 PM IST

திண்டுக்கல்:தமிழ்நாடு வணிகர் சங்க நிர்வாகிகளின் சந்திப்பு திண்டுக்கல்லில் உள்ள மாவட்ட தொழில் வர்த்தக சங்க கட்டடத்தில் இன்று (ஆகஸ்ட் 19) நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா பேசினார்.

அப்போது பேசிய அவர், 'தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வரும் 24ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டம் சார்பில் ஆயிரம் புதிய வணிகர்களை உறுப்பினராக்கும் பணி நடக்க உள்ளது. தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் பேரை உறுப்பினர்களாக சேர்க்கும் பணிகளைத் தொடங்கி உள்ளோம்.

வரிவசூலிப்பதில் அலுவலர்கள் நெருக்கடி தரக்கூடாது

மாநில அரசுத்துறை அலுவலர்கள் வரி வசூலிப்பதில், திண்டுக்கல்லில் கடுமையான நெருக்கடியை வணிகர்களுக்கு கொடுத்து வருகின்றனர், வியாபாரிகள் மற்றும் வணிகர்களை அச்சுறுத்தி வரி வசூலிக்கமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். லைசென்ஸ் மற்றும் வரி விதிப்பு நியாயமான முறையில் வெளிப்படையாக இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாடு முழுவதும் பேரூராட்சி, உள்ளாட்சி, அறநிலையத்துறை, பேருந்து நிலையம் உள்ளிட்டப் பகுதிகளில் உள்ள கடைகள் கரோனா காரணமாக முழுமையாக மூடப்பட்டுள்ளன. அந்தக் கடைகளுக்கு வாடகை தள்ளுபடி செய்ய வேண்டும், என்ற கோரிக்கையை வலியுறுத்தி முதலமைச்சரை சந்திக்க உள்ளோம்.

ஜிஎஸ்டி தொடர்பாக வணிகர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. இதனால் பல வியாபாரிகள் மன உளைச்சலில் உள்ளனர். இதற்கு சமாதான கமிட்டி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று சமாதான கமிட்டி அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு வருமானம் அதிகரிக்கும்.

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காவிட்டால் போராட்டம்

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காவிட்டால் போராட்டம் - விக்கிரமராஜா எச்சரிக்கை

பெட்ரோல் விலையை மாநில அரசு 3 ரூபாய் குறைத்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து டீசல் விலையையும் குறைக்க வேண்டும். டீசல், பெட்ரோல் விலை குறைந்தால் மற்ற பொருள்களின் விலை குறையும்.

மத்திய அரசு டீசல் விலையைக் கணிசமாக குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஏற்கனவே ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் எனத் திட்டமிட்டு இருந்தோம்.

கரோனா காலத்தில் அரசுக்கு தொந்தரவு கொடுக்காமல் இருக்க போராட்டத் தேதியை அறிவிக்காமல் இருந்தோம். பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காமல் இருந்தால், அனைத்து மாவட்டத்திலும் போராட்டம் நடத்தப்படும்.

விலைவாசி உயர்வுக்கு மத்திய, மாநில அரசுகள் இரண்டும் தான் காரணம். ஆனால், மாநில அரசு பதவியேற்று மூன்று மாதங்கள் ஆகிறது. இந்த பட்ஜெட்டில் வேளாண்மைக்குத் தனி பட்ஜெட் உள்ளிட்ட பல திட்டங்களை செய்து வருகிறது.

அண்டை மாநிலத்தில் வணிகர்களுக்கு ஓய்வூதியத்திட்டம்

தமிழ்நாடு அரசின் பல்வேறு திட்டங்கள் காரணமாக விலைவாசி குறையும் வாய்ப்புள்ளது. அரசுக்கு ஜிஎஸ்டி மூலம் ஒரு கோடிக்கு மேல் வருவாய் வருவதால் சம்பளம் வாங்காத அரசு ஊழியர்களாக வணிகர்கள் வேலை செய்து வருகின்றனர்.

அண்டை மாநிலமான கேரளாவில் வணிகர்களுக்கு ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதுபோல தமிழ்நாட்டில் உள்ள வணிகர்களுக்கு நலத்திட்ட உதவிகள் கிடைக்க வழிவகை செய்யும் திட்டத்தை அமல்படுத்த முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்க உள்ளோம்' இவ்வாறு அவர் கூறினார்.

அவருடன் மாவட்டத் தலைவர் கிருபாகரன், பொருளாளர் நசீர் சேட் உட்பட பலர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை: மத்திய அரசு அறிவிப்பு

Last Updated : Aug 19, 2021, 8:08 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details