தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குளியல் அறையில் கேமரா பொருத்திய இலங்கை இளைஞர் கைது! - திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே இலங்கை அகதிகள் முகாமில் , குளியலறையில் கேமரா பொருத்தி படம் எடுக்க முயற்சித்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

இளைஞர்
இளைஞர்

By

Published : May 14, 2022, 10:03 PM IST

திண்டுக்கல் :வத்தலக்குண்டு அருகே உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர் குளிப்பதற்காக வீட்டின் வெளிப்புறம் உள்ள குளியலறைக்குச் சென்றுள்ளார். அப்போது குளியல் அறையின் மேற்பகுதியில் கருப்பு நிறத்தில் சிறிய அளவிலான கேமரா ஒன்று பொருத்தப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து தனது வீட்டில் இருப்பவர்களிடம் அந்த பெண் கூறியுள்ளார். இதையடுத்து அந்த பெண்ணின் குடும்பத்தார் வத்தலக்குண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். உடனடியாக வத்தலக்குண்டு காவல் நிலைய ஆய்வாளர் முருகன் தலைமையிலான போலீசார் நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.

இதில் அதே பகுதியை சேர்ந்த பெயிண்டர் வேலை செய்யும் விஜயகுமார் என்பவர் குளியலறையில் கேமராவை பொருத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணை செய்ததில் அவர் யூடியூப் சேனலை பார்த்து தானியங்கி வெப் கேமரா ஒன்றை தயாரித்ததாக கூறியுள்ளார். இதையடுத்து விஜயகுமார் மீது வழக்குப் பதிந்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:ஆபத்தான முறையில் பைக் சாகசம் - இளைஞர் கைது

ABOUT THE AUTHOR

...view details