திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் ஸ்ரீமத் லிங்குசாமியின் ஜீவசமாதி அமைந்துள்ளது. இங்கு சுவாமிகளின் 97ஆம் ஆண்டு குருபூஜை விமர்சையாக நடைபெற்றது.
கணபதி ஹோமத்துடன் தொடங்கிய பூஜைகள், புனித நீர் அடங்கிய 9 கலசங்கள் கொண்டு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. பின்னர், சிவனடியார்கள் திருவாசகம் முற்றோதினர்.
தொடர்ந்து சிவ வாத்தியங்கள் முழங்க பால், பன்னீர், தயிர், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்டவை கொண்டு சொர்ணாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிவனடியார்கள் மட்டும் கலந்து கொள்ளும் மகேஸ்வர பூஜையும் நடைபெற்றது.
பின்னர் யாகத்தில் வைத்து பூஜைகள் செய்யப்பட புனிதநீர் கலசங்களை சிவனடியார்கள் வரிசையாக எடுத்துவந்து சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தனர். பொதுமக்கள், சிவனடியார்கள் வழங்கிய பூக்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
ஸ்ரீமத் லிங்குசாமிகளின் 97ஆம் ஆண்டு குருபூஜை சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருந்த சிவ லிங்கத்தை தரிசிக்க திண்டுக்கல், வத்தலக்குண்டு, சின்னாளபட்டி, கன்னிவாடி, ஒட்டன்னித்திரம், பழனி உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்களும், சிவனடியார்களும் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க: மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் நள்ளிரவில் வலிய படுக்கை பூஜை!