திண்டுக்கல்: தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை தற்போது படிப்படியாகக் குறைந்து வருகிறது. கரோனா பரவலைத் தடுக்க தகுதியானவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அரசு அறிவுறுத்தி வருகிறது.
அந்தவகையில் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் இரண்டு தவணைகளாக செலுத்தப்பட்டு வருகிறது. ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி இந்தியாவில் கடந்த சில நாள்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது. இருப்பினும் இந்தத் தடுப்பூசி பெருமளவில் கிடைக்காமல் உள்ளன.
திண்டுக்கல்லில் முதல் முறையாக ஸ்புட்னிக் வி தடுப்பூசி ஆட்சியர் பங்கேற்ப்பு
இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனை ஒன்றில் ஸ்புட்னிக் வி தடுப்பூசி முதன்முறையாக இன்று (செப்.7) செலுத்தப்பட்டது.
தடுப்பூசி மையத்தை மாவட்ட ஆட்சியர் விசாகன் தொடங்கிவைத்தார். திண்டுக்கல் அரசு மருத்துவமனை இணை இயக்குநர் அன்புச்செல்வன், சுகாதார பணிகள் துணை இயக்குநர் வரதராஜன், வட்டார மருத்துவ அலுவலர் சீனிவாசன், மருத்துவமனை சேர்மன் டாக்டர் துரைமுருகன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:'செப்.12ஆம் தேதி 10 ஆயிரம் தடுப்பூசி முகாம்கள்' - அமைச்சர் மா.சுப்பிரமணியன்