திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ஜவகர். இவர் நத்தம்-கொட்டாம்பட்டி சாலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
50 ரூபாய் லஞ்சம் வாங்கிய சிறப்பு சார்பு ஆய்வாளர் சஸ்பெண்ட் - Dindigul district news
திண்டுக்கல்: நத்தம் அருகே 50 ரூபாய் லஞ்சம் வாங்கிய சிறப்பு சார்பு ஆய்வாளரின் காணொலி சமூக வலைதளத்தில் வேகமாகபரவியதையடுத்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
![50 ரூபாய் லஞ்சம் வாங்கிய சிறப்பு சார்பு ஆய்வாளர் சஸ்பெண்ட் லஞ்சம் வாங்கிய சிறப்பு சார்பு ஆய்வாளர் சஸ்பெண்ட்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-03:22:09:1624096329-tn-dgl-01-natham-ssisuspendbribe-visual-img-scr-tn10053-19062021141002-1906f-1624092002-647.jpg)
லஞ்சம் வாங்கிய சிறப்பு சார்பு ஆய்வாளர் சஸ்பெண்ட்
அப்போது அந்த வழியாக காய்கறிகளை ஏற்றிக்கொண்டு சரக்கு வாகனம் ஒன்று வந்துள்ளது. இதைத் தடுத்து நிறுத்திய சிறப்பு சார்பு ஆய்வாளர் ஜவகர் ஓட்டுநரிடம் உரிய ஆவணங்களை காண்பிக்குமாறு கூறியுள்ளார். இதன் பின்னர் காய்கறி வாகன ஓட்டுனரிடம் ரூபாய் 50 லஞ்சமாக அவர் பெற்றுள்ளார். இதை வேனை ஓட்டி வந்த ஓட்டுநர் தனது செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இந்த காணொலி இணையத்தில் வேகமாக பரவத் தொடங்கியது.
50 ரூபாய் லஞ்சம் வாங்கிய சிறப்பு சார்பு ஆய்வாளர் சஸ்பெண்ட்
இதையும் படிங்க: பாம்பன் ரயில் பாலத்தில் மீண்டும் ரயில் இயக்கம்