திண்டுக்கல்: இந்தியாவின் அடுத்தகட்ட வளர்ச்சியாக சூரியனை ஆய்வு செய்ய விண்ணில் பாய்கிறது ஆதித்யா L-1 செயற்கைகோள். சூரியனைப் பற்றி விரிவாக ஆய்வு மேற்கொள்ள தொடர் கண்காணிப்பில் ஆதித்யா L-1 செயற்கைக்கோள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதித்யா L-1 செயற்கைகோள் விண்ணில் செல்லக்கூடிய காட்சிகளை மக்கள் நேரில் கண்டுகளிக்க சிறப்பு ஏற்பாடுகளுடன், இலவச அனுமதியையும் வழங்குவதாக அறிவித்துள்ளது கொடைக்கானல் வான் இயற்பியல் ஆராய்ச்சி நிலையம். இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் வரவேற்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, உலகில் முதல் நாடாக நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திராயன்-3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அடுத்த கட்ட திட்டச்செயலாக சூரியனைப் பற்றி ஆய்வு செய்வதற்காக, இந்தியாவில் இருந்து ஆதித்யா L-1 என்ற விண்கலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஸ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் பாய்கிறது.
பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்படும் இந்த செயற்கைக்கோள், சூரியனில் இருந்து வெளிவரக்கூடிய கதிர்கள் மற்றும் சூரியனின் வெளிப்புற கரோனா குறித்தும் சூரியனில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் இடைவெளியின்றி தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொள்ளும். பின்னர், அங்கிருந்து பதிவு செய்யக்கூடிய படங்கள் அதிவேகமாக பூமிக்கு செயற்கைக்கோளில் அனுப்பி வைக்கப்படும்.
அவ்வாறு அனுப்பி வைக்கப்படும் படங்களை வைத்து பல கேள்விகளுக்கான பதில்கள் மற்றும் அது குறித்து ஆராய்ச்சிகள் தொடரப்படும். பிரபஞ்சம் தோன்றியது எப்படி உள்ளிட்ட பல்வேறு அரிய கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக ஆதித்யா L-1 இருக்கும் என்றும் கூறப்படுகிறது. நொடிக்கு நான்கு புகைப்படங்கள் வரை பூமிக்கு இந்த செயற்கைக்கோளிலிருந்து அனுப்பி வைக்கப்படும் என்றும் ஆதித்யா செயற்கைக்கோளிலிருந்து வரக்கூடிய படங்கள் மற்றும் தகவல்களை வைத்து பல்வேறு ஆராய்ச்சிகளும், தொடர் கண்காணிப்பில் இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.
இது குறித்து கொடைக்கானல் வான் இயற்பியல் ஆராய்ச்சி நிலையத்தின் தலைமை விஞ்ஞானி எபினேசர் கூறுகையில், "உலகெங்கும் பல்வேறு ஆராய்சியாளர்கள் சூரியன் குறித்த ஆய்வுகளை முன்னெடுத்துள்ளனர். முன்னதாக solar tunnel telescopeஐ வைத்து சூரியன் பிரத்யேகமாக புகைப்படங்கள் எடுக்கப்பட்டது. தற்போது இது டிஜிட்டல் மையமாக்கப்பட்டுள்ளது. visible photosphere என்று சொல்லக்கூடிய வெளிப்புரத்தை 1904 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை ஏறத்தாழ 120 வருடங்களுக்கு மேலாக பயன்படுத்தி துல்லியமாக புகைபடங்கள் எடுத்து வருகிறோம்.