தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முப்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படும் சூரிய கிரகணம் தென் தமிழகத்தில் நன்றாக தெரியும் - சுனாமி நினைவு தினம்

திண்டுக்கல்: 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படும் சூரிய கிரகணம் தென் தமிழகத்தில் நன்றாக தெரியும் என்று வான் இயற்பியல் ஆய்வகம் தெரிவித்துள்ளது.

solar eclipse
solar eclipse

By

Published : Dec 6, 2019, 9:39 AM IST

ஒவ்வொரு ஆண்டும் சூரிய சந்திர கிரகணங்கள் நடக்கிறது. இந்த ஆண்டுக்கான சூரிய கிரகணம் டிசம்பர் 26ம் தேதி நடக்கிறது. ஆனால் இந்த ஆண்டு சூரிய கிரகணம் 30 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும். நெருப்பு வளையம் போன்று தோன்றும் இந்த சூரிய கிரகணம் ஒரு அரிய நிகழ்வு.

இந்த நிகழ்வு டிசம்பர் 26 ஆம் தேதி காலை 8.30 மணி முதல் 1 மணி வரை நடக்கிறது. சரியாக காலை 9:33 மணிக்கு நன்கு தெளிவாகத் தெரியும்.

சூரிய கிரகணம்

இது பற்றி கொடைக்கானல் வான் இயற்பியல் ஆராய்ச்சி மைய விஞ்ஞானி கூறுகையில், இந்த அரிய நிகழ்வானது தென் தமிழகத்தில் மிகத் தெளிவாகத் தெரியும். 95% இந்த சூரிய கிரகணம் ஏற்படும். இந்த கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கக்கூடாது, சூரியக் கண்ணாடி வழியாக மட்டுமே பார்க்கலாம். இந்த சூரிய கிரகண நிகழ்வில் சூரியன் வெள்ளை மற்றும் கருப்பு நிறத்தில் தென்படும் என தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details