சமூக செயற்பாட்டாளரும், காந்தியவாதியுமான ஊட்டி பிரதான கடைத்தெருவைச் சேர்ந்தவர் நிசார் சேட் (52). இவரது மனைவி, குழந்தைகள் ஒத்துழைப்புடன் இந்திய அளவில் பல்வேறு சமூகப் பணிகளை செய்துவருகிறார். தற்போது கோவையிலிருந்து ஒட்டன்சத்திரம் வழியாக மதுரை சென்றார்.
இவரது மகள் ஹாஜரா பானு (14) 2019ஆம் ஆண்டு கோழிக்கோட்டில் நடைபெற்ற ஒரு சாலை விபத்தில் உயிரிழந்தார். இதன்பின்னர் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலையில் சாலை விபத்துகளில் பாதிக்கப்படும் பொதுமக்கள், விலங்குகளைக் காப்பாற்றுவது, சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது, மனநோயாளிகளை சுத்தப்படுத்தி அவர்களுக்கு ஆடை வழங்குவது, இந்தியாவின் சுதந்திரத்திற்காக உயிர்நீத்த தலைவர்கள் பற்றியும், அகில இந்திய அளவில் பொதுமக்களுக்கு அவரவர் மொழிகளில் விழிப்புணர்வை இவர் ஏற்படுத்திவருகிறார்.