திண்டுக்கல் :தமிழ்நாட்டில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நேற்றிரவு (நவ.11) முதல் தொடர்ச்சியாக மிதமான மழை பெய்து வருகிறது. தொடர்மழை காரணமாக கொடைக்கானல் நுழைவாயில் பகுதியில் அமைந்துள்ள வெள்ளி நீர்வீழ்ச்சியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து வெள்ளி நீர்வீழ்ச்சியில் பகுதியில் சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து வருகின்றனர்.
கொடைக்கானல் வெள்ளி நீர்விழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு! - நீர்வீழ்ச்சி
கொடைக்கானலில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக வெள்ளி நீர்வீழ்ச்சியில் இன்று (நவ.12) வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
Etv Bharat
மழை தொடர்வதகரித்து கொடைக்கானல் பகுதியில் உள்ள அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மழையால் கொடைக்கானலில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளதாகவும், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:தி.மலை அருகே விவசாய பணியின் போது மின்னல் தாக்கியதில் பெண் பலி!