திண்டுக்கல் மாவட்டம் மேட்டு ராஜக்காபட்டியில் ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. நூறு வருடங்கள் பழமையான இக்கோயிலில், அண்மையில் ஒரு கோடி ரூபாய் செலவில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றது. இதில், புதிதாக ஐந்தடி உயரத்தில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமியின் கற்சிலை நிறுவப்பட்டுள்ளது.
திண்டுக்கல் ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோயில் மகா கும்பாபிஷேக விழா! - திண்டுக்கல், ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோயில், கும்பாபிஷேக விழா
திண்டுக்கல்: நூறு வருடங்கள் பழமையான ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோயில் மகா கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
![திண்டுக்கல் ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோயில் மகா கும்பாபிஷேக விழா!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4309643-thumbnail-3x2-koil.jpg)
temple-at-dindigul
தமிழ்நாட்டிலேயே இங்குதான் அதிக உயரம் கொண்ட சுப்பிரமணிய சுவாமி சிலை அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து, கடந்த மூன்று நாட்களாக பூஜை நடைபெற்று வரும் நிலையில், இன்று காலை மூலவர் சன்னிதான கோபுரமான ராஜகோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
திண்டுக்கல் ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோயில் மகா கும்பாபிஷேக விழா
இந்நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமியின் அருள்பெற்றனர். பின்னர், விழாவில் ஆயிரக்கனக்கான பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.