தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வியாபாரிகள் போராட்டம்: பழனியில் கடைகள் திறப்பு!

பழனியில் காந்தி மார்க்கெட் வியாபாரிகளின் போராட்டத்தை தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.

பழனியில் கடைகள் திறப்பு
பழனியில் கடைகள் திறப்பு

By

Published : Jun 9, 2021, 10:44 PM IST

தமிழ்நாடு முழுவதும் கடந்த 7ஆம் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மளிகை, காய்கறி கடைகள் இயங்க அரசு அனுமதி அளித்தது.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள காந்தி மார்க்கெட்டில் காலை 6 மணியில் இருந்து 10 மணி வரை மட்டுமே கடைகளை திறக்க அலுவலர்கள் உத்தரவிட்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காந்தி மார்க்கெட் கடை வியாபாரிகள் போராட்டம் நடத்தினர். அவர்களுக்கு ஆதரவாக பழனியில் உள்ள அனைத்து கடை வியாபாரிகளும் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் பொதுமக்கள், சில்லறை வியாபாரிகள்‌ பொருள்கள் கிடைக்காமல் அவதி அடைந்தனர். இதனையடுத்து பழனி கோட்டாச்சியர் ஆனந்தி தலைமையில் வியாபாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், காலை முதல் மாலை வரை வியாபாரிகள் காந்தி மார்கெட்டில் மளிகை கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதுபோல காந்தி மார்க்கெட் காய்கறி கடைகள்‌ அனைத்தும் பழனி பேருந்து நிலையத்தில் தற்காலிகமாக நடத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

மேலும் அரசு தெரிவித்துள்ள‌ கட்டுப்பாடுகளுடன் முறையாக கடைகளை திறந்து கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த வியாபாரிகள்‌ ஒத்துழைக்க வேண்டும் என்று அலுவலர்கள் தெரிவித்தனர். இந்தக் கூட்டத்தில் பழனி வட்டாட்சியர் வடிவேல் முருகன், நகராட்சி ஆணையர் நாராயணன், டி.எஸ்.பி சிவா, வியாபாரிகள் சங்க நிர்வாகிகள்‌ உள்பட‌ பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:உறுப்புகள் மாறி பிறந்து அவதியுறும் மகன்: மருத்துவ செலவு கோரி மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர் விண்ணப்பம்

ABOUT THE AUTHOR

...view details