திண்டுக்கல்:கொடைக்கானலில் உள்ள தனியார் விடுதியில் நெய்வேலி தொழிற்சங்க முன்னேற்ற சங்கம் சார்பில் இரண்டு நாள்கள் தொழிற்சங்க தலைவர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
இன்று (செப்.22) நடைபெற்ற பயிற்சி முகாமிற்கு அதன் பொதுச் செயலாளரும் திமுக மாநிலங்களவை உறுப்பினருமான சண்முகம் தலைமை வகித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஒன்றிய அரசு பொதுத்துறை நிறுவனங்களை தற்போது தாரை வார்த்து வருகிறது. இதில் ஏராளமான நிறுவனங்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. பொதுத்துறை நிறுவனங்களை தொடர்ந்து விற்பனை செய்து வரும் போக்கை ஒன்றிய அரசு நிறுத்த வேண்டும்.