தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திண்டுக்கல்லில் தடை செய்யப்பட்ட பனங்கள்ளு விற்பனை: முதியவர் கைது - திண்டுக்கலில் தடை செய்யப்பட்ட பனங்கள்ளு விற்பனை

திண்டுக்கல்: சட்டவிரோதமாக தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட பனங்கள்ளை விற்பனை செய்த முதியவர் கைது செய்யப்பட்டார்.

தடை செய்யப்பட்ட பனங்கள்ளு உடன் முதியவர்
தடை செய்யப்பட்ட பனங்கள்ளு உடன் முதியவர்

By

Published : Mar 20, 2020, 10:25 AM IST

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கேதையுறும்பு கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவர், அரசு மருத்துவமனை அருகே உள்ள தனது வீட்டில் சட்டவிரோதமாக தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட பனங்கள்ளு விற்பனை செய்வதாக, ஒட்டன்சத்திரம் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது. தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அரசால் தடை செய்யப்பட்ட பனங்கள்ளுவை விற்பனை செய்த முதியவர் கைது

அப்போது சட்டவிரோதமாக குமார் என்பவர் பனங்கள்ளு விற்பனை செய்வது உறுதியானது. உடனடியாக குமாரை கைது செய்த காவல் துறையினர் அவரிடமிருந்த 75 லிட்டர் பனங்கள்ளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:கடைக்குள் பதுங்கி கொள்ளை முயற்சி - ஊழியரைப் பிடித்த உரிமையாளர்

ABOUT THE AUTHOR

...view details