தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திண்டுக்கல் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக சீனிவாசன் பொறுப்பேற்றார் - Seenivasan take incharge as new police sp of dindigul

திண்டுக்கல் மாவட்டத்தின் 31ஆவது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சீனிவாசன் பொறுப்பேற்றுக் கொண்டார்

tn_dgl_02_newssp_policeincharge_visual_img_scr_tn10053
tn_dgl_02_newssp_policeincharge_visual_img_scr_tn10053

By

Published : Aug 4, 2021, 10:34 PM IST

திண்டுக்கல்:மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக சீனிவாசன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த ரவளி பிரியா, தஞ்சாவூர் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக திருவாரூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்த சீனிவாசன் மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து இன்று திண்டுக்கல் மாவட்டத்தின் 31ஆவது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சீனிவாசன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

திண்டுக்கல் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக சீனிவாசன்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீனிவாசன், திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு சம்பந்தமான பிரச்னைகள் உடனடியாக தீர்க்கப்பட்டு, சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும். கரோனா நோய்த்தொற்று சம்பந்தமாக அரசு விதிமுறைகளை பின்பற்றி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மாவட்டத்தில் போக்குவரத்தை சீர்செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். பெண்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்படும். திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு மாற்றுத்திறனாளிகள் வந்தால் அவர்களை தரை தளத்திலேயே சந்திக்க ஏற்பாடு செய்யப்படும்.

திண்டுக்கல் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக சீனிவாசன்

மாவட்ட கண்காணிப்பாளர் ஆகிய நான் இல்லாத பட்சத்தில் காவல் கண்காணிப்பு பிரிவில் உள்ள அலுவலர்கள் உடனடியாக குறைகளைக் கேட்டு நிவர்த்தி செய்வார்கள். திண்டுக்கல் மாவட்டத்தில் திருட்டு கொள்ளை சம்பவங்கள் அதிகம் நடைபெறும் பகுதிகளில் எந்த நேரங்களில் குற்றச் சம்பவங்கள் நடைபெறுகிறது என்பதை கண்டறிந்து காவல் ரோந்து பணிகள் கூடுதல் ஆக்கப்படும் என்றார்.

இதையும் படிங்க:மருத்துவர் சுப்பையா படுகொலை - ஆசிரியர் உள்பட 7 பேருக்கு தூக்கு!

ABOUT THE AUTHOR

...view details