திண்டுக்கல் மாவட்டம், மலைக்கோட்டை பின்புறம் அமைந்துள்ளது முத்தழகுபட்டி. இங்குள்ள புனித செபஸ்தியார் ஆலய திருவிழா ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்தில் நடைபெறும். இந்த ஆலயத் திருவிழா கடந்த 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான அன்னதானத் திருவிழா இன்று தொடங்கியது. இவ்விழாவிற்காக மக்கள் நேர்த்திக்கடனுக்காக கொடுத்த 1300 ஆடுகள்,1300 சேவல்கள், 750 கிலோ அரிசி, 2டன் காய்கறிகள் கொண்டு உணவு சமைக்கப்பட்டு மக்களுக்கு விடிய விடிய அன்னதானம் வழங்கப்பட்டது.
மதநல்லிணக்கத்திற்கு மற்றுமொரு சான்று: திரளானோர் கலந்து கொண்ட திருவிழா - மெகா அன்னதான திருவிழா
திண்டுக்கல்: 300 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் புனித செபஸ்தியார் ஆலய திருவிழாவில் சாதிமத பேதமின்றி அனைத்து மக்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
சாதிமத பேதமில்லா மெகா அன்னதான திருவிழா
இந்த விழாவில் சாதி மத பேதமின்றி தமிழ்நாடு முழுவதும் உள்ள மக்கள் கலந்து கொண்டனர். இதில் பலி கொடுக்கப்படும் இறைச்சிகள் இஸ்லாமிய முறைப்படி ஹலால் செய்யப்பட்டு அதன்பின் சமைக்கப்படும். மேலும், இவ்விழாவில் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர்கள் என அனைத்து மதத்தினரும் ஒன்று சேர்ந்து பங்கேற்பது குறிப்படத்தக்கது. சுமார், 300 ஆண்டுகளாக நடைபெறும் இத்திருவிழா தமிழ்நாட்டில் பேணப்படும் மதநல்லிணக்கத்திற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.
Last Updated : Aug 7, 2019, 5:15 AM IST