திண்டுக்கல்:தமிழ்நாட்டில் பள்ளிக்கு தாமதமாக வரும் மாணவர்களை ஆசிரியர்கள், வகுப்பறைக்கு வெளியே நிற்க சொல்வதையும், முட்டி போட வைப்பதையும் பார்த்திருப்போம். சில பள்ளிகளில் ஆசியர்கள் மாணவர்களை பிரம்பால் அடித்ததையும் கேள்விப்பட்டிருப்போம். ஏன் நாமும் அனுபவித்திருப்போம். இதற்கெல்லாம் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்களை மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் துன்பப்படுத்துவது குறைந்து விட்டது.
இருப்பினும், பல பள்ளிகள் இன்னும் தொடர்ந்து வருகிறது. அந்த வகையில், திண்டுக்கல்லில் பள்ளிக்கு தாமதமாக வந்த 10ஆம் வகுப்பு மாணவனை உச்சி வெயிலில் முட்டி போட வைத்த ஆசிரியரின் செயல் கடும் கண்டனத்துக்கு உள்ளாகி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செந்துறை அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது.
இந்தப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை நத்தம் அருகே உள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த சுமார் 1,600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் நேற்று (மார்ச் 13) காலை 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடந்தது. இதனால் மற்ற வகுப்பு மாணவர்களுக்கு மதியம் வகுப்புகள் எடுக்கப்படும் என்றும் மதியம் பள்ளிக்கு வருகை தந்தால் போதும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:பள்ளியை மேம்படுத்த முன்னாள் மாணவர்களை அணுகுங்கள்: தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை