திண்டுக்கல்:கொடைக்கானல் அருகே பேத்துப்பாறை பகுதியில் ஐந்து வீடு நீர்வீழ்ச்சி உள்ளது. இந்நிலையில், நாயுடுபுரம் சேரன்நகரை சேர்ந்த பிரின்ஸ்(17) என்பவரும் அவரது நண்பர்களும் ஐந்து வீடு நீர்வீழ்ச்சிக்கு சென்று உள்ளனர். ஆபத்தை உணராத நண்பர்கள் நீர்வீழ்ச்சியின் ஓரமான பகுதிக்கு சென்றுள்ளனர்.
அப்போது பிரின்ஸ் எதிர்பாராத விதமாக தவறி விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பலியானார். அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் அப்பகுதி மக்கள் உதவியுடன் வீழ்ச்சியில் சிக்கிய பிரின்ஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.