தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பழைய பொருள்களை கொண்டு கலைப்பொருள்கள் உருவாக்கும் பள்ளி மாணவன் - பள்ளி மாணவன்

கரோனா வைரஸ் பாதிப்பால் விடுமுறையில் வீட்டிலிருக்கும் பள்ளி மாணவர், பழைய பொருள்களை கொண்டு கலைப்பொருள்கள் உருவாக்குவது அவரது பெற்றோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

school student create art from waste in curfew
school student create art from waste in curfew

By

Published : Jun 13, 2020, 2:34 AM IST

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அசோக் நகரை சேர்ந்த பள்ளி மாணவர் தஜ்மல் அக்தர் (12). அவர், அழகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது கரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் விடுமுறையில் வீட்டில் உள்ளார். இந்நிலையில் ஊரடங்கு நேரத்தில், வீணாகும் பொருள்களை கொண்டு பல்வேறு கலைப் பொருள்களை சிறுவன் தஜ்மல் தயாரித்துவருகிறார்.

இதுகுறித்து பேசிய தஜ்மல், "உறவினர் பரிசாக வழங்கிய பொம்மை கார் சேதமடைந்ததை சரி செய்யும்போது கலைப்பொருள்களை தயாரிக்கும் ஆர்வம் ஏற்பட்டது. இயல்பாகவே எந்த ஒரு விளையாட்டு பொருள்களை பார்த்தாலும் அதன் பாகங்களை உன்னிப்பாக கவனிக்கும் வழக்கம் எப்போதும் உண்டு. பரிசாக வந்த பொம்மை கார் சேதம் அடைந்தபோது ஏன் வேறு காரை வாங்க வேண்டும் இதை நாமே சரி செய்யலாம் என்று எண்ணினேன்.

அதிலிருந்து மனதில் தோன்றும் பொருள்களை தயாரித்து பழகி வருகிறேன். இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. அதையடுத்து பழைய வீணாகும் அட்டைப்பெட்டி, பேப்பர் உள்ளிட்ட பொருள்களை கொண்டு கார், கைத்துப்பாக்கி உள்ளிட்ட பொருள்களை தயாரிக்க தொடங்கினேன். மேலும், படித்து இந்திய ராணுவத்துக்கு குறைந்த செலவில் ஆயுத தளவாடங்களை உற்பத்தி செய்து தருவதே எனது கனவு" என தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details