தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆன்லைன் வகுப்பால் நேர்ந்த சோகம்: பள்ளி மாணவி தற்கொலை

ஆன்லைன் வகுப்பில் மதிப்பெண் குறைவாக எடுத்ததையடுத்து, தாய் திட்டியதால் மகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை
தற்கொலை

By

Published : Aug 6, 2021, 8:26 AM IST

திண்டுக்கல்: வேடசந்தூர் எரியோடு அருகே ஒத்தக்கடையைச் சேர்ந்தவர் தீபா. இவரது கணவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், மகள் கீர்த்தனாவுடன் (16) வசித்துவருகிறார். தற்போது கரோனா தொற்று காரணமாகப் பள்ளிகள் திறக்காத காரணத்தினால், ஆன்லைன் வகுப்பு வழியாக கீர்த்தனா 11ஆம் வகுப்பு படித்துவந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக ஆன்லைன் வகுப்பில் முறையாகக் கலந்துகொள்ளாமலும், மதிப்பெண் குறைவாக எடுத்ததாலும் கீர்த்தனாவை அவரது தாயார் திட்டியுள்ளார்.

தற்கொலை தீர்வல்ல

இதனால் மனமுடைந்த மாணவி அதே ஊரில் உள்ள 80 அடி ஆழமுள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்புத் துறையினர், சடலத்தை மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்தனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து எரியோடு ஆய்வாளர் சத்யபிரபா தலைமையில் விசாரணை நடைபெற்றுவருகிறது.

இதையும் படிங்க:போலீஸ் விசாரணையால் மனமுடைந்த இளைஞர் தற்கொலை

ABOUT THE AUTHOR

...view details