திண்டுக்கல்:திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுகவின் ஆலோசனைக் கூட்டம் இன்று (ஜூன் 20) மாலை அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அதிமுக மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் சசிகலாவிற்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், "சசிகலா அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது. தேர்தலுக்கு முன்பு அரசியலை விட்டு ஒதுங்கிக் கொள்வதாக அறிவித்த அவர் தற்போது அரசியல் முக்கியத்துவத்தைத் தேடிக்கொள்ளும் வகையிலும், அதிமுகவை அபகரிக்கும் நோக்கிலும் செயல்படுகிறார்.