திண்டுக்கல்:தமிழ்நாடு அரசு மின் கட்டணத்தை உயர்த்தியற்கு எதிர்ப்புத் தெரிவித்து அதிமுக சார்பில் இன்று (16.09.22) திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் திண்டுக்கல் அடுத்துள்ள பொன்னகரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், அதிமுக கிழக்கு மாவட்டச்செயலாளருமான நத்தம் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசுகையில், “சசிகலாவைப் பொறுத்தவரை அது முடிந்து போன சகாப்தம். அதை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்த வேண்டிய அவசியம் இல்லை. அது குறித்து பதில் கூறி எனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.