திண்டுக்கல் மாவட்டம், ஜிம்கானா பகுதியில் மனித எலும்புக்கூடு ஒன்று குப்பைத் தொட்டியில் கிடப்பதாக தகவல் கசிந்ததை அடுத்து, அந்த இடத்தில் ஏராளமான மக்கள் குவிந்தனர். தொடர்ந்து இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
குப்பைத் தொட்டியில் கிடந்த எலும்புக்கூடு: குவிந்த மக்கள்! - Dindugal district news
திண்டுக்கல்: தனியார் பள்ளி ஒன்று பயன்பாட்டில் இல்லாத மாதிரி மனித எலும்புக்கூட்டை குப்பையோடு குப்பையாக சேர்த்து வீசியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் பள்ளியிலிருந்து வீசப்பட்ட மாதிரி எலும்புக் கூட்டால் பரபரப்பு
அதன் பின் நடைபெற்ற விசாரணையில், அப்பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆய்வுக் கூடத்தில் பயன்பாட்டில் இல்லாமல் இருந்து வந்த மாதிரி மனித எலும்புக்கூட்டை, குப்பையோடு குப்பையாக சேர்த்து பள்ளி நிர்வாகம் வீசியது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து பதட்டம் தணிந்து மக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.