சாகித்திய அகாதமி, காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழக தமிழ்த்துறை இணைந்து மகாத்மா காந்தியின் 150ஆம் பிறந்தநாளை முன்னிட்டு மகாத்மா காந்தியும் தமிழ் இலக்கியமும்' என்ற தலைப்பில் இரண்டு நாள் தேசிய கருத்தரங்கத்தை ஏற்பாடு செய்துள்ளன.
இன்றும் நாளையும் நடைபெறும் இந்நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் சாகித்திய அகாதமியின் பொறுப்பு அலுவலர் சந்திரசேகர ராஜீ வரவேற்புரை வழங்கினார். பல்கலைக்கழக துணைவேந்தர் (பொ.) பேராசிரியர் எம். சுந்தரவடிவேலு தலைமை தாங்கினார்.
அவர் பேசும்போது, "இன்றைய சூழலில் காந்தியை இளைஞர் சமுதாயத்திடம் கொண்டு செல்ல வேண்டிய தேவையுள்ளது. மகாத்மாவை பாரதி தொடங்கிப் பல தமிழ் எழுத்தாளர்களும் போற்றியுள்ளனர். சாகித்திய அகாதமியோடு தொடர்ந்து இணைந்து இதேபோன்று செயல்படுவோம் என்று கூறினார்.