தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தண்டவாள விரிசல்: சபரி எக்ஸ்பிரஸ் ஒரு மணிநேரம் தாமதம்! - சபரி எக்ஸ்பிரஸ் தமாதம்

சேலம்: சூரமங்கலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதையடுத்து சபரி எக்ஸ்பிரஸ் ரயில் ஒரு மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டு சென்றது.

rail
rail

By

Published : Dec 13, 2019, 1:48 PM IST

சேலம் சூரமங்கலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் அருகே உள்ளது நெய்க்காரப்பட்டி.இந்த பகுதியில் சேலத்தில் இருந்து ஈரோட்டுக்குச் செல்ல ஒரு ரயில் பாதையும், ஈரோட்டில் இருந்து சேலத்திற்கு வர தனி ரயில் பாதையும் உள்ளது.

தண்டவாள விரிசல்

இன்று காலை சபரி எக்ஸ்பிரஸ் ரயில் சேலம் ஜங்ஷன் ரயில் நிலையம் வந்து பின்னர் ஈரோட்டுக்குப் புறப்பட்டுச் சென்றது. நெய்க்காரப்பட்டி அருகே சபரி எக்ஸ்பிரஸ் சென்றபோது தண்டவாளத்தில் விரிசல் இருப்பதை ரயில் எஞ்சின் ஓட்டுநர் கண்டு பிடித்து ரயிலை நிறுத்தினார்.

பின் அவர் சேலம் ஜங்ஷன் ரயில்வே அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தார். உடனே ரயில்வே அலுவலர்களும் ஊழியர்களும் நிகழ்விடத்திற்கு சென்று விரிசல் விட்ட பகுதியை சரிசெய்தனர். இதையடுத்து சபரி எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக கிளம்பிச் சென்றது.

இதுகுறித்து ரயில்வே துறை அலுவலர்கள் கூறியதாவது, குளிர்காலத்திலும், மழைக்காலத்திலும் தண்டவாளங்களில் விரிசல் விடுவது உண்டு. தற்போது குளிர்காலம். இதனால் தண்டவாளத்தில் விரிசல் விட்டு உள்ளது. ரயில் என்ஜின் ஒட்டுநர் சரியான நேரத்தில் விரிசலை கண்டுபிடித்து தகவல் தெரிவித்தால் தண்டவாள விரிசல் உடனே சரி செய்யப்பட்டது என்றார்.

ABOUT THE AUTHOR

...view details