தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோயில் பெயரில் ரசீது கொடுத்து ஒரு லட்சம் மோசடி: போலி வழிகாட்டி கைது - பழனி முருகன் கோயில்

திண்டுக்கல்: பழனி முருகன் கோயில் பெயரில் அன்னதான ரசிதை அச்சடித்து ஒரு லட்சம் ரூபாயை மோசடி செய்த போலி வழிகாட்டியை காவல் துறையினர் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

fake guidance arrested
fake guidance arrested

By

Published : Feb 2, 2020, 8:22 AM IST

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்துசெல்கின்றனர். இக்கோயிலுக்கு வெளிமாநிலங்களிலிருந்து வரக்கூடிய பக்தர்களை ஏமாற்றி மலை அடிவாரத்தில் சுற்றித்திரியும் போலி வழிகாட்டிகள் பணம் பறிக்கும் சம்பவம் நடைபெறுவதாகப் புகார்கள் எழுந்துவருகின்றன.

இந்நிலையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த அனந்தராமன் என்ற பக்தர் பழனி மலை கோயிலுக்குச் சாமி தரிசனம்செய்வதற்காக கடந்த மாதம் வந்துள்ளார். அனந்தராமனை பழனியைச் சேர்ந்த பாபு என்பவர் மலைக்கு சாமி தரிசனம் செய்ய அழைத்துச் சென்று அறிமுகமாகியுள்ளார்.

பின்னர் ஹைதராபாத் சென்ற அனந்தராமன் பழனி முருகன் கோயிலில் நடைமுறையில் உள்ள அன்னதான திட்டத்திற்கு நன்கொடை செலுத்த விரும்பி, பாபுவிடம் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை அவரது வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார்.

ஆனால் பாபு அவரிடன் பெற்ற பணத்தை கோயில் அலுவலகத்தில் செலுத்தாமல், பழனி கோயிலில் வழங்குவது போன்று போலியான ரசீது ஒன்றை தயார்செய்து அந்த நபருக்கு அனுப்பிவைத்துள்ளார்.

இதனையடுத்து ரசீதைப் பெற்றுக்கொண்ட அனந்தராமன், மீண்டும் அவரை தொடர்புகொண்டபோது அவரது அழைப்பை பாபு எடுக்காததால் அவர் மீது சந்தேகம் அடைந்துள்ளார்.

கோயில் பெயரில் ரசீது கொடுத்து ஒரு லட்சம் ரூபாய் மோசடி

இதனால் சந்தேகமடைந்த அனந்தராமன், பழனி கோயில் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு கேட்டபோது பாபு கொடுத்த ரசீது போலியானது என்பது தெரியவந்துள்ளது. கோயில் பெயரில் போலி ரசீதை அச்சிட்டு பக்தரை ஏமாற்றியது குறித்து பழனி கோவில் நிர்வாகம் சார்பில் பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் பாபு மீது புகார் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து பழனி இடும்பன் கோயில் தெருவைச் சேர்ந்த பாபுவை கைது செய்த காவல் துறையினர், அவரிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர். பழனி கோயில் நிர்வாகத்தில் வழங்குவதுபோல போலி ரசீது அச்சிட்டு பக்தர் ஏமாற்றப்பட்ட சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:மதுரையை இழிவுபடுத்தும் வகையில் டிக்டாக் - வெறுப்பேத்தும் பிராங்க் ஷோக்கள்

ABOUT THE AUTHOR

...view details