தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘யானை தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம்’

திண்டுக்கல்: யானை தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்திற்கு 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.

Rs 4 lakhs relief fund to family of deadman attacked by elephant

By

Published : Nov 12, 2019, 9:50 PM IST

திண்டுக்கல்லில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பொழுதுபோக்கு பூங்காவை தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், ”தமிழ்நாட்டிலுள்ள வனப்பகுதியில் யானைகள், வனவிலங்குகள் குடியிருப்புப் பகுதிக்கு வரும்போது, மக்களுக்கு என்ன பாதுகாப்பு வழங்கப்படுமோ அதைத்தான் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். கொடைக்கானல், பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் யானையைப் பிடிப்பதற்கு கும்கி வரவழைக்கப்பட்டுள்ளது. யானைகள் மேலிருந்து கீழ் இறங்காமல் இருப்பதற்கு அகழிகள் அமைக்கப்பட்டுள்ளன.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி

கொடைக்கானல் பகுதியில் யானை தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்திற்கு 4 லட்சம் ரூபாயும், காயத்தின் தன்மையைப் பொறுத்து காயம்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும். உள்ளாட்சித் தேர்தலில் முழு வெற்றி அதிமுகவுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். ரஜினி கூறும் வெற்றிடம் என்பது எங்கிருக்கிறது என்று தெரியவில்லை. முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் மறைவிற்குப் பின்பு மூன்று ஆண்டுகள் எடப்பாடி பழனிசாமி ஆட்சி செய்து வருகிறார். இதைவிட ஆளுமையுடன் யாராலும் செயல்பட முடியாது” என்றார்.

இதையும் படிங்க: சட்டம், ஓழுங்கு குறித்து பிரதமர் வெளியிட்ட அறிக்கையில் தமிழ்நாடு முதலிடம் - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

ABOUT THE AUTHOR

...view details