திண்டுக்கல்:வேடசந்தூர் தாலுகா, அய்யலூர் அருகே மணியக்காரன்பட்டியில் அங்கன்வாடி செயல்பட்டு வருகிறது. இதில், 25-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். அங்கன்வாடிக்கு புதுக்கட்டடம் கட்டப்பட்டு வருவதால் அருகில் உள்ள நாடக மேடையில் தற்காலிகமாக அங்கன்வாடி செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று (டிசம்பர் 28) இந்த அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளுக்கு மதிய உணவுடன் வழங்கப்படவிருந்த, முட்டைகள் அழுகிய நிலையில் இருந்திருக்கின்றன. இதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்களும், குழந்தைகளின் பெற்றோரும் அதிர்ச்சியடைந்தனர். மேலும், அழுகிய முட்டைகளைச் சமைத்து பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கவிருந்த அங்கன்வாடி பணியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.