தமிழ்நாட்டில் பக்தர்கள் அதிகமாகக் கூடும் கோயில் பழனி. குறிப்பாக பக்தர்கள் கோயில் மலைப்பகுதிக்கு செல்வதற்காக கடந்த 2004ஆம் ஆண்டு ரோப் கார் வசதி கொண்டுவரப்பட்டது.
அதன்படி, முதியவர்கள், சிறுவர்கள் என அனைவரும் ரோப் கார் மூலம் பயணிப்பார்கள். பக்தர்களின் பாதுகாப்பு கருதி ஆண்டிற்கு ஒருமுறை ரோப் கார் சேவை ஒரு மாத காலம் நிறுத்தப்பட்டு வருடாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
அந்த வகையில், தற்போது ரோப் கார் வருடாந்திர பராமரிப்பு பணியை ஊழியர்கள் தொடங்கியுள்ளனர். இந்தப் பராமரிப்பு பணியின் போது கீழ்த்தளம் மற்றும் மேல் தளத்தில் உள்ள இரும்பு சக்கரங்கள், மின் மோட்டார்கள், இரும்பு கம்பி போன்றவை பழுது நீக்கம் செய்யப்படும்.
இந்தப் பராமரிப்பு பணி ஒரு மாத காலத்திற்கு நடைபெறும். பின்னர் சோதனை ஓட்டத்திற்கு பிறகு வழக்கம்போல் ரோப்கார் சேவை இயங்கும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பழனி முருகன் கோயிலில் கடந்த ஐந்து மாதங்களாக பக்தர்கள் யாரும் அனுதிக்கப்படாத நிலையில் ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவெடுப்போம் - அமைச்சர் ஜெயக்குமார்