திண்டுக்கல்:மதுரை கே.புத்தூரைச் சேர்ந்தவர் ராஜன். இவர் தனது மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். தனது வறுமைப் போக்கச் சாலையோரங்களில் செல்போன் பேக் கவர்களை விற்பனை செய்து வருகிறார். தற்போது பழனியில் ஐஎஃப்எஸ் சீசன் தொடங்கியுள்ளதால் பழனி நகர் காவல் நிலையம் அருகில் சாலையோரத்தில் செல்போன் கவர்களை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.
இவரை, பழனி பேருந்து நிலையத்தில் செல்போன் கடை நடத்தி வரும் சுதர்சன் என்பவர் வியாபார போட்டி காரணமாக தாக்கியுள்ளார். மேலும், ‘50 ரூபாய்க்கு செல்போன் கவரை நீ விற்பனை செய்தால் நாங்கள் எல்லாம் என்ன செய்வது’ என கேட்டு மிரட்டி கன்னத்தில் அறைந்துள்ளார். தொடர்ந்து, ‘பழனியில் இனி வியாபாரம் செய்தால் நீ இருக்கமாட்டாய்’ என கொலை மிரட்டல் விடுத்தாக தெரிகிறது.
இந்த சம்பவத்தை அங்கிருந்த செல்போன் கடைக்காரர் வீடியோ எடுத்து, வாட்சப் குழுவில் வீடியோவை பகிர்ந்துள்ளார். இது குறித்து சாலையோர வியாபாரி ராஜனிடம் கேட்டபோது, “மதுரையில் மனைவி, இரண்டு பெண் குழந்தைகளை தனியாக விட்டுவிட்டு பழனியில் சாலையோரத்தில் செல்போன் கவர் விற்பனை செய்து வருகிறேன். வேலை கேட்டுச் சென்றாள் யாரும் வேலை கொடுக்காத நிலையில் வேறு வழியின்றி குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக செல்போன் கவர் வாங்கி விற்பனை செய்து வருகிறேன்.