தமிழ்நாடு

tamil nadu

ராட்சச பாறையால் கொடைக்கானலில் போக்குவரத்து பாதிப்பு

திண்டுக்க‌ல்: கொடைக்கான‌லில் பெய்துவ‌ந்த‌ ம‌ழையால் ப‌ழ‌னி பிர‌தான‌ சாலையில் ராட்ச‌ச பாறை சாலையில் விழுந்ததால் போக்குவ‌ர‌த்து பாதிப்பு ஏற்ப‌ட்டுள்ள‌து.

By

Published : Nov 28, 2020, 4:41 PM IST

Published : Nov 28, 2020, 4:41 PM IST

Updated : Nov 28, 2020, 6:03 PM IST

Roadblock
Rock

திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌ம் கொடைக்கான‌லில் க‌ட‌ந்த‌ சில‌ நாட்க‌ளாக‌ வெயிலும் அவ்வ‌போது லேசான‌ ம‌ழையும் பெய்து வ‌ந்த‌து, இந்நிலையில் நேற்று (நவ 27) கொடைக்கான‌ல் ம‌ட்டுமின்றி ப‌ல்வேறு ம‌லை கிராம‌ங்க‌ளில் மித‌மான‌ ம‌ழை பெய்த‌து.

தொட‌ர்ந்து கொடைக்கான‌ல் - ப‌ழ‌னி பிர‌தான‌ சாலையான‌ கோம்பை காடு ப‌குதியில் ராட்ச‌ச‌ பாறை சாலையின் குறுக்கே விழுந்தது, மேலும் ம‌ர‌ங்க‌ளும் சாய்ந்ததால். போக்குவர‌த்து பாதிப்பு ஏற்ப‌ட்டது

ராட்ச‌ச‌ பாறையை அக‌ற்றுவ‌த‌ற்கு நெடுஞ்சாலை துறையின‌ர் தாம‌த‌ம் ஏற்படுத்தியதால் போக்குவ‌ர‌த்தும் முற்றிலும் முட‌க்க‌ப்ப‌ட்டது. இத‌னால் பொதும‌க்க‌ள், சுற்றுலா ப‌ய‌ணிக‌ள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர்.

மேலும் சாலையின் குறுக்கே ராட்ச‌ச‌ பாறையை விரைந்து அக‌ற்றி போக்குவ‌ர‌த்தை சீர‌மைக்க‌ வேண்டுமென‌வும் அப்ப‌குதி பொதும‌க்க‌ள், சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ள் கோரிக்கை விடுத்த நிலையில், ராட்ச‌ச‌ பாறைக‌ள் ஜேசிபி எந்திர‌ங்க‌ள் மூல‌ம் அக‌ற்ற‌ப்ப‌ட்டு போக்குவ‌ர‌த்து சீரான‌து. இத‌னால் 3 ம‌ணி நேர‌த்திற்கும் மேலாக‌ போக்குவ‌ர‌த்து பாதிப்பு ஏற்பட்டது.

Last Updated : Nov 28, 2020, 6:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details