திண்டுக்கல்:தமிழ்நாட்டின் சுற்றுலாத் தளங்களில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் முக்கிய பங்கு வகித்து வருகிறது. சுற்றுலா பயணிகளின் பட்ஜெட் ஃபிரெண்டிலி இடமாகவும் இருந்து வருகிறது. இங்கு வனத்துறை கட்டுப்பாட்டில் மோயர் சதுக்கம், குணா குகை, தூண் பாறை என பிரமிக்க வைக்கும் பல்வேறு இடங்கள் உள்ளது.
தற்போது இங்கு பல்வேறு வகை பூக்கள் பூக்கத் தொடங்கியுள்ளன. இதனை காண சுற்றுலா பயணிகள் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். தோட்டக்கலை துறை கட்டுப்பாட்டில், நகர் பகுதியில் பிரையன்ட் என்ற பூங்கா ஒன்று அமைந்துள்ளது. தற்போது இந்த பூங்காவில் பல்வேறு வகையில், பல லட்சம் மலர்கள் பூத்துக் குலுங்கி வருகிறது. இதற்கு முன்பு, முதல் பருவத்திலும் இது போன்று பல்வேறு வகையிலான பூக்கள் பூத்துகுலுங்கின. அந்த வகையில் தற்போதும் அதிகளவிலான பூக்கள் பூத்துள்ளது.