பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சந்திரன் செல்லும்போது சூரிய கிரகணம் ஏற்படும். அமாவாசை தினத்தன்றுதான் சூரிய கிரகணம் நிகழும். இதனால் சூரியன், முழுவதுமாகவோ அல்லது பகுதியோ மறைக்கப்படும். இதில் சந்திரன் சூரியனை மறைப்பதால், சூரியனின் ஒளி வட்டம் நெருப்பு வளையமாக தெரியும்.
இந்நிகழ்வு கொடைக்கானல் வான் இயற்பியல் ஆராய்ச்சி நிலையத்தில் நுண்ணோக்கிகள் மூலம் கண்காணிக்கப்பட்டது. இதில் சூரிய கிரகணம் மிக தெளிவாக 30 சதவீதம் அளவில் தென்பட்டது.
பொதுவாக கொடைக்கானல் வான் இயற்பியல் ஆராய்ச்சி நிலையத்தில் சந்திர கிரகணம், சூரிய கிரகணம் போன்ற அரிய நிகழ்வுகளை பார்ப்பதற்கு மக்கள் அனுமதிக்கப்படுவார்கள்.