தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோட்டை மாரியம்மன் திருக்கோயில் உண்டியலில் ரூ. 27 லட்சம் காணிக்கை! - Department of Hindu Religious Affairs

திண்டுக்கல்: மாசித் திருவிழா நிறைவடைந்ததை முன்னிட்டு, திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் திருக்கோயில் உண்டியல் காணிக்கையாக 27 லட்சம் ரூபாய் வருவாயாக கிடைத்துள்ளது.

கோட்டை மாரியம்மன் திருக்கோயில் உண்டியலில் ரூ. 27 லட்சம் காணிக்கை
கோட்டை மாரியம்மன் திருக்கோயில் உண்டியலில் ரூ. 27 லட்சம் காணிக்கை

By

Published : Apr 8, 2021, 10:24 PM IST

தமிழ்நாடு முழுவதும் பிரசித்திப்பெற்ற கோயில்களில் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலும் ஒன்றாகும். இங்கு ஒவ்வொரு ஆண்டும் மாசிப் பெருந்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

கரோனா விதி முறையுடன் நடைபெற்ற மாசித் திருவிழா

அதேபோல், இந்தாண்டு நடைபெற்ற மாசித் திருவிழா கரோனா விதி முறைகளுடன் கொண்டாடப்பட்டது. திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா முடிந்த நிலையில், உண்டியல் எண்ணும் பணி இன்று (ஏப். 8) நடைபெற்றது.

உண்டியல் எண்ணிக்கையில்..

கோட்டை மாரியம்மன் திருக்கோயில் உண்டியலில் ரூ. 27 லட்சம் காணிக்கை கிடைத்துள்ளது.

உண்டியல் எண்ணிக்கையில் 468 கிராம் தங்கம், 1 கிலோ 760 கிராம் வெள்ளி, 27 லட்சம் ரொக்கப்பணம் காணிக்கையாக கிடைத்தது. உண்டியல் என்னும் பணியில் சமூக ஆர்வலர்கள், பெண்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அனிதா, நிர்வாகப் பரம்பரை அறங்காவலர் சுபாஷினி ஆகியோர் மேற்பார்வையில் நடைபெற்றது.

இதையும் படிங்க: 'திருப்பதியில் இலவச தரிசனம் ரத்து!'

ABOUT THE AUTHOR

...view details