தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்: வார்டு உறுப்பினர்கள் மனு

திண்டுக்கல்: ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும் எனக்கோரி வார்டு உறுப்பினர்கள் அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

உறுப்பினர்கள் மனு
உறுப்பினர்கள் மனு

By

Published : Oct 2, 2020, 5:55 AM IST

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியை அடுத்த ஆத்தூர் ஒன்றியம், பாளையங்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவராக அழகுமலை என்பவரும், துணைத்தலைவர் தெய்வலட்சுமி என்பவரும் உள்ளனர். இந்த ஊராட்சியில் துணைத் தலைவர் உள்பட மொத்தம் ஒன்பது உறுப்பினர்கள் உள்ளனர்.

இந்நிலையில் ஊராட்சி மன்றத்தின் துணைத் தலைவர் செயல்பாடுகள் சரியில்லை எனக் கூறுகின்றனர். அவர் நடந்து முடிந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலுக்குப் பிறகு, ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வருவதில்லை, மற்ற வார்டு உறுப்பினர்களை மதிப்பதில்லை எனக் கூறி பாளையங்கோட்டை ஊராட்சியில் உள்ள வார்டு உறுப்பினர்கள் கலைராணி, அனுசியா, முனிசெல்வம், சீனியம்மாள், அழகுமலை, செந்தாமரை செல்வி, தனலட்சுமி ஆகிய ஏழு உறுப்பினர்களும் ஆத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர் மருதமுத்துவிடம் மனு அளித்தனர்.

அதில், துணைத் தலைவர் தெய்வலட்சுமியை உடனடியாக மாற்ற வேண்டும். தொடர்ந்து அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர வேண்டும் எனக் கூறினார்.

இதனிடையே மொத்தம் உள்ள ஒன்பது வார்டு உறுப்பினர்களில் துணைத்தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு 7 பேர் மனு கொடுத்துள்ள சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details