திண்டுக்கல்:பருவமழை காலங்களில் நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரிக்கும். அப்போது, நீர்நிலைகளில் சிக்கிக் கொள்பவர்களை மீட்பது, மழைக்கால மீட்புப் பணிகளில் ஈடுபடுவது தொடர்பாக திண்டுக்கல் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சார்பில் நேற்று (ஜூலை 19) கோட்டை குளத்தில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் விசாகன் தொடங்கிவைத்தார். மழை காலங்களில் மின் சாதனங்களால் ஏற்படும் ஆபத்துக்கள், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து தப்பிப்பது, இடி, மின்னலில் இருந்து தப்பிப்பது போன்றவற்றை செய்முறை மூலம் ஒத்திகை காட்டினர். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக செய்து காட்டப்பட்டது எனத் தெரிவித்தனர்.