திண்டுக்கல்: பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம் வருகிற ஜனவரி மாதம் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வருகிற 25ஆம் தேதி முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி
நடைபெறவுள்ளது. கும்பாபிஷேகம் நடந்துமுடிந்த 3 நாள்களிலேயே ஜனவரி 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் தைப்பூசத் திருவிழா தொடங்கவுள்ளது.
கும்பாபிஷேகத்தை தொடர்ந்து 48 நாட்கள் நடைபெற வேண்டிய மண்டல பூஜையானது, கும்பாபிஷேக தினமான அன்று ஒரு நாள் மட்டும் நடத்தப்பட்டு நிறைவு செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பழனி கோயில் கும்பாபிஷேகம் ஆகம விதிகளை மீறி நடைபெறுவதாக குற்றம்சாட்டி, இந்து தமிழர் கட்சியின் நிறுவனத் தலைவர் ராம ரவிக்குமார் பழனி கோயில் இணை ஆணையரிடம் மனு அளித்துள்ளார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது, “16 ஆண்டுகளுக்குப் பிறகு பழனி கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுவது மகிழ்ச்சிக்குரியது. ஆனால், நீண்ட நாட்களுக்குப் பிறகு நடைபெறும் கும்பாபிஷேகத்தில் ஆகம விதிகள் முறையாக கடைபிடிக்கப்படவில்லை. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து 48 நாட்கள் நடைபெற வேண்டிய மண்டல பூஜையை ஒரே நாளில் நடத்துவதாக கோயில் நிர்வாகம் அறிவித்திருப்பது ஆகம விதிகளுக்கு எதிரானது.