தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொடைக்கானலில் படகு சவாரிக்கு அனுமதிக்க கோரிக்கை - கொடைக்கானல் நட்சத்திர ஏரி

கொடைக்கான‌ல் ந‌ட்ச‌த்திர ஏரியில் ப‌ட‌கு ச‌வாரிக்கு அனும‌திக்க‌ வேண்டுமென‌ பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Request to allow Boating in kodaikanal
Request to allow Boating in kodaikanal

By

Published : Jul 11, 2021, 8:59 PM IST

திண்டுக்க‌ல்:கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த சில மாதங்களாக கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கு தடைவிதிக்கப்பட்டது.

தொடர்ந்து தமிழ்நாட்டில் கரோனா பரவல் குறைந்ததை அடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

தற்போது கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர். இருப்பினும் சுற்றுலா இடங்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளன. இதனால் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

நட்சத்திர ஏரியில் உள்ள படகு குழாம்

படகு சவாரிக்கு அனுமதிக்க கோரிக்கை

க‌ட‌ந்த‌ வார‌ம் தோட்ட‌க்க‌லைத்துறைக்குச் சொந்த‌மான‌ மூன்று பூங்கா திற‌க்க‌ப்ப‌ட்ட‌ ம‌றுநாளே மூட‌ப்ப‌ட்ட‌து. ப‌ல‌ மாத‌ங்க‌ளாக இய‌க்க‌ப்ப‌டாம‌ல், இருக்கும் ப‌ட‌குக‌ள் சேத‌ம‌டைந்தும் வருகின்றன.

படகு சவாரிக்கு அனுமதி இல்லாததால் வெறிச்சோடி காணப்படும் படகுகள்

எனவே, ந‌க‌ரின் ம‌த்தியில் அமைந்துள்ள‌ ந‌ட்ச‌த்திர‌ ஏரியில் ந‌க‌ராட்சி ம‌ற்றும் சுற்றுலா வ‌ளர்ச்சி க‌ழ‌க‌த்தின் ப‌ட‌கு குழாம்க‌ளில் அர‌சு விதிமுறைக‌ளைப் பின்ப‌ற்றி, ப‌ட‌கு சவாரிக்கு அனும‌தி அளிக்க வேண்டுமென‌ சுற்றுலாப் ப‌ய‌ணிக‌ளும் வியாபாரிகளும் த‌மிழ்நாடு அர‌சுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details