திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் முக்கிய சுற்றுலா தலமாக இருந்து வருகிறது. இங்கு ஆண்டுக்கு பல லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தருவர். கொடைக்கானலில் முதல் சீசன் ஏப்ரல் மாதம் 2 தொடங்கி மே மாதம் இறுதியில் முடிவடையும்.
இந்நிலையில் உலகையே அச்சுறுத்தி வந்த கரோனா பெருந்தொற்றின் காரணமாக பொதுமக்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். தற்போது 2வது சீசன் நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் ஆரம்பிக்கபட உள்ள நிலையில் 5ஆம் கட்ட தளர்வுகளில் கொடைக்கானலுக்கு இ-பாஸ் பெற்று சுற்றுலா பயணிகள் வரலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்தது.
தொடர்ந்து தோட்டக்கலை துறைக்கு சொந்தமான பூங்காக்கள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. ஆனால் முக்கிய சுற்றுலா தலங்கள் அனைத்தும் வனத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. முக்கிய தலங்களான மோயர் பாயிண்ட், குணாகுகை, பைன்மரகாடுகள், பில்லர்ராக், பேரிஜம் ஏரி, மதிகெட்டான் சோலை , மன்னவனூர் ஏரி, கரடி நீர்வீழ்ச்சி, உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் அடைக்கப்பட்டுள்ளன.