திண்டுக்கல்:கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் ரோஜா பூங்கா உள்ளது. பூங்காவில் சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக ஆயிரக்கணக்கான ரோஜா மலர்கள் நடவு செய்யப்பட்டுள்ளது. தற்போது கொடைக்கானலில் முக்கிய சுற்றுலா தளமாக மாறிவரும் இந்த ரோஜா பூங்கா அண்மைக்காலமாகப் பராமரிப்பு இன்றியும் காணப்படுகிறது. மேலும் மழையின் காரணமாக ரோஜா மலர்கள் அனைத்தும் அழுகி வருகிறது.
ரோஜா பூங்காவில் அமைந்துள்ள தண்ணீர் தொட்டி துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் குப்பைகள் ஆங்காங்கே கொட்டப்பட்டு வருகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் அப்பகுதியின் வழியே செல்ல முடியாமல் முகம் சுளிக்கும் நிலை இருந்து வருகிறது.
மேலும் ஆங்காங்கே புதர்கள் மண்டி காணப்படுகிறது. மேலும் ரோஜா பூங்காவில் மலர்கள் இன்றி, பராமரிப்பு இன்றி இருப்பதாலும் ஆவலுடன் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். மேலும் ரோஜா பூங்காவில் பராமரிப்பு இன்றி இருந்தும் கூட, நுழைவு கட்டணம் அதிகரித்து உள்ளதாகச் சுற்றுலாப் பயணிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதனையடுத்து பூங்காவில் சிசிடிவி கேமராக்கள் இல்லாமல் இருப்பதால் குற்றச் செயல்கள் நடைபெற வாய்ப்பு உள்ளதாகவும் கூறுகின்றனர். எனவே தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ரோஜா பூங்காவை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்று சுற்றுலாப் பணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு ரோஜா பூங்காவை பராமரிக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை இதையும் படிங்க:பில்கிஸ் பானு வழக்கு - குற்றவாளிகள் விடுதலையை எதிர்த்த மனுக்கள் மீதான விசாரணை நவ.29ம் தேதித்து ஒத்திவைப்பு!