தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரெட்டியார்சத்திரத்தில் முருகன் கோயில் சீரமைப்பு பணி தொடக்கம்

திண்டுக்கல் அருகே ரெட்டியார்சத்திரத்தில் 600 ஆண்டு பழைமையான செம்பினால் ஆன 16 அடி பாதாள முருகன் கோயில் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது.

renovation-work-of-palani-murugan-temple-begins
renovation-work-of-palani-murugan-temple-begins

By

Published : Jun 11, 2021, 8:20 AM IST

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் உலக பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோயில் உள்ளது. இக்கோயிலில் உள்ள மூலவர் முருகன் சிலை, போகர் சித்தரால் நவபாசானத்தில் செய்யப்பட்ட முருகன் சிலையாகும். இவர் பழனி மலைக்கு செல்லும் வழியில் ரெட்டியார்சத்திரம் எல்லப்பட்டி பகுதியில் செம்பினால் ஆன 16 அடி பாதாள முருகன் சிலையை செய்து அப்பகுதியில் நிறுவி வழிபாடு செய்து வந்தார்.

இந்த செம்பினால் ஆன முருகன் சிலை நான்கடி மட்டுமே தரைக்கு மேல் பிரதிஷ்டை செய்யப்பட்டு, மீதம் உள்ள 16 அடி உயர சிலை தரை மட்டத்தில் இருந்து பூமிக்கடியில் பாதாளத்தில் நிறுவபட்டு போகரால் வழிபாடு செய்யப்பட்டதாக வரலாறு கூறுகிறது. 600 வருடங்கள் பழமை வாய்ந்த இக்கோயிலில் பல வருடங்களுக்கு பிறகு தற்போது சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.

சீரமைப்பு பணிகள் தொடக்கம்

இதுகுறித்து கோயில் நிர்வாகி அறிவழகன் கூறும்போது, ”ஆகஸ்ட் மாதம் கும்பாபிஷேக விழா நடைபெறும். ஒரே கல்லில் செய்யப்பட்ட சிவன், நந்தி, 8 அடி உயர சங்கிலி கருப்பு சாமி சிலை, அம்மன் சிலை, மகாலெட்சுமி சிலை என பல விக்ரகங்கள் மகாபலிபுரத்திலிருந்து வரவழைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'பள்ளிகளின் கட்டமைப்பு வசதி குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும்' அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

ABOUT THE AUTHOR

...view details