தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருமணத்தை மீறிய உறவால் மூதாட்டிக்கு அறிவாள் வெட்டு - 4 பேர் கைது - பள்ளி மாணவன் கைது

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் அருகே திருமணத்தை மீறிய உறவில் ஏற்பட்ட தகராறில் மூதாட்டியை அறிவாளால் வெட்டிய இளைஞர் உள்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

relationship-beyond-marriage-four-arrested-for-trying-to-murder
relationship-beyond-marriage-four-arrested-for-trying-to-murder

By

Published : Feb 18, 2020, 11:44 AM IST

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள பழையபட்டியைச் சேர்ந்த சக்திவேல் என்பவரின் மனைவி மகேஷ்வரி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில், மகேஷ்வரி மகள் சிந்துஜாவை கடந்த சில தினங்களுக்கு முன்பு செல்வராஜ் பாலியல் தொந்தரவு செய்தார். இது குறித்து சிந்துஜா தனது பாட்டி அருக்காணியிடம் தெரிவித்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் (பிப். 16) வீட்டிற்கு வந்த செல்வராஜை அருக்காணி, மகேஷ்வரி, சிந்துஜா ஆகிய மூவரும் சேர்ந்து அடித்து விரட்டினர். இதனால் ஆத்திரமடைந்த செல்வராஜ், தனது சகோதரர்களான சகாயராஜ், ஆனந்தன், அவரது மகன் பெரியசாமி ஆகியோருடன் நேற்று அருக்காணி வீட்டிற்கு சென்று தகராறு செய்தனர்.

அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், பெரியசாமி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மூதாட்டியை வெட்டியுள்ளார். அதில் அவருக்கு தலை, வயிறு, கை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு, ஆபத்தான நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருமணத்தை மீறிய உறவால் மூதாட்டிக்கு அறிவாள் வெட்டு

இது குறித்து வழக்குப்பதிவு செய்த ஒட்டன்சத்திரம் காவல்துறையினர், செல்வராஜ், சகாயராஜ், ஆனந்தன், பெரியசாமி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: திருமணத்தை தாண்டிய உறவு: கணவனை கொலை செய்ய முயன்ற ஆசிரியை உள்பட மூவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details