தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திண்டுக்கல்லில் பத்திரப் பதிவு எழுத்தர் காருக்கு தீ வைப்பு - car fire accident

திண்டுக்கல்: வடமதுரையில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த பத்திரப் பதிவு எழுத்தர் காருக்கு தீ வைத்தவர்களை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

car-fire-accident-in-dindigul
car-fire-accident-in-dindigul

By

Published : Jul 7, 2020, 3:26 PM IST

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வடமதுரையில் பத்திரப் பதிவு எழுத்தராக பணிபுரிபவர் தண்டபாணி. அவர் நேற்று வடமதுரை முனியாண்டி கோயில் தெருவிலுள்ள தனது ஓட்டுனரான குணா என்பவரது வீட்டினருகே காரை நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.

அதையடுத்து நள்ளிரவு 2 மணி அளவில் காரில் புகை கிளம்பியதை அடுத்து அக்கம்பக்கத்தினர் காருக்கு தீ வைக்கப்பட்டிருப்பதை அறிந்தனர். அதன்பின் அவர்கள் அருகிலிருந்த நீர் தொட்டியிலிருந்த தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். அதன்பின் வடமதுரை காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, காருக்கு தீ வைத்தவர்கள் தேடப்பட்டுவருகின்றனர்.

இதையும் படிங்க:விலையுயர்ந்த காருக்கு தீ வைத்த அடையாளம் தெரியாத நபர்: போலீஸ் வலைவீச்சு!

ABOUT THE AUTHOR

...view details