தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எரிந்த நிலையில் சிறுமியின் உடல் மீட்பு - திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திண்டுக்கல்: புதுப்பட்டியில் 17 வயது சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

எரிந்த நிலையில் சிறுமி உடல் மீட்பு
எரிந்த நிலையில் சிறுமி உடல் மீட்பு

By

Published : Apr 24, 2021, 7:39 PM IST

திண்டுக்கல் மாவட்டம் புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முனியாண்டி என்பவரது மகள் பிரியா (17). இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனத் தெரிகிறது. இந்நிலையில் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றி சிறுமி தீவைத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் வீட்டின் கதவை உடைத்து சிறுமியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் உடல் முழுவதும் தீ எரிந்ததில் சிறுமி உயிரிழந்தார். பின்னர் காவல் துறையினர் சிறுமியின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

விசாரணையில் சிறுமி தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதைத் தொடர்ந்து செய்துவந்தது தெரியவந்துள்ளது. இருப்பினும், சிறுமியின் உயிரிழப்பில் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க: கணவன்- மனைவி இருவரும் தூக்கிட்டு தற்கொலை

ABOUT THE AUTHOR

...view details