திண்டுக்கல் : நந்தவனப்பட்டி வில்லவன் காலனியை சேர்ந்தவர் லட்சுமணன். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.இவரிடம் ஒட்டன்சத்திரம் கேதையுரம்பு பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவர் தனக்கு 3 1/2 ஏக்கர் நிலம் வாங்க லட்சுமணனை தொடர்பு கொண்டுள்ளார்.
அப்போது லட்சுமணன் கணேசனிடம் நிலம் வாங்கி தருவதாக கூறி 2019 ஆம் வருடம் சுமார் 8 லட்ச ரூபாய் முன்பணமாக வாங்கி உள்ளார். ஆனால் கடந்த இரண்டு வருடமாக நிலமும் வாங்கித்தரவில்லை கொடுத்த பணத்தையும் திரும்ப தரவில்லை.
இதுதொடர்பாக திண்டுக்கல் மாவட்ட காவல் துறை காவல் கண்காணிப்பாளரிடம் கடந்த 3 மாதங்களுக்கு முன் கணேசன் புகார் அளித்தார்.
பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணையில், லட்சுமணன் பணம் வாங்கி மோசடி செய்தது உறுதியானது.
இதனையடுத்து திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் உத்தரவின் பெயரில் மோசடி செய்த லட்சுமணன் மீது வழக்குப் பதிவு செய்து நிலக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
நிலம் வாங்கித் தருவதாக கூறி ரூ.8 லட்சம் மோசடி - ரியல் எஸ்டேட் அதிபர் கைது - நிலம் வாங்கி தருவதாக கூறி பண மோசடி
நிலம் வாங்கித் தருவதாக கூறி ரூபாய் எட்டு லட்சத்தை மோசடி செய்த ரியல் எஸ்டேட் தொழில் அதிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கைது
இதையும் படிங்க : மனைவியை சேர்த்து வைக்கக் கோரி மனு அளித்த கணவருக்கு கத்திக் குத்து
Last Updated : Aug 20, 2021, 9:46 PM IST