மதுரையிலிருந்து தனியார் ஹெலிகாப்டர் மூலமாக பழனி வந்தடைந்த ரவிசங்கர், மலை அடிவாரத்திலிருந்து ரோப் கார் மூலமாக மலைக் கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் உச்சிகால பூஜை முடிந்து சாமி தரிசனம் செய்த ரவிசங்கர் மீண்டும் வின்ச் வழியாக மலையடிவாரத்திற்கு வந்தடைந்தார்.
அதனைத் தொடர்ந்து மலையடிவாரத்தில் உள்ள புலிப்பாணி ஜீவ சமாதிக்குச் சென்ற அவர் சாமி தரிசனம் செய்தார். பின்னர் தனியார் திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தியான நிகழ்ச்சியில் ரவிசங்கர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.