திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த சக்திவேல், சென்னை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் கண்காணிப்பாளராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சென்னை மாதவரம் துணை காவல் ஆணையராக பணிபுரிந்துவந்த ரவளி பிரியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அதன்படி இன்று ரவளி பிரியா திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவர் திண்டுக்கல் மாவட்டத்தின் முதல் பெண் காவல் கண்காணிப்பாளராவார்.