தமிழ்நாடு முழுவதும் அக்னி நட்சத்திர நாட்களில் கோடை வெயில் சுட்டெரித்தது. திண்டுக்கல் மாவட்டம், பழனி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் அடித்தது. இதனால் பல இடங்களிலும் மரம், செடி, கொடிகள் காய்ந்தன.
அக்னி நட்சத்திரத்தின் கடைசி நாளில் மழை; விவசாயிகள் மகிழ்ச்சி! - அக்னி நட்சத்திரம்
திண்டுக்கல்: அக்னி நட்சத்திரத்தின் கடைசி நாளான இன்று பிற்பகல் மழை பெய்ததால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.
மழை
இந்நிலையில், அக்னி நட்சத்திரம் கடைசி நாளான இன்று பிற்பகலில் திடீரென சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. திடீர் மழையை எதிர்பாராத மக்கள் மழையில் நனைந்தபடியே சாலைகளில் சென்றனர். மழையால் குளிர்ந்த சூழல் நிலவியது. நகர்ப்பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையினால் பொதுமக்களும் விவசாயிகலும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், திடீரென பெய்த மழையால் நகரின் பல இடங்களிலும் சாக்கடை நீர் சாலையில் ஓடியது.